• Sun. Nov 10th, 2024

விக்ரம் நடிகர்-ன்னு ஒத்துக்க மாட்டேன்! – ராஜகுமாரன்

நீ வருவாய் என என்ற படம் மூலமாக, தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ராஜகுமாரன். அதைத்தொடர்ந்து சரத்குமார், விக்ரம், குஷ்பூ, தேவயானி ஆகியோரின் நடிப்பில் வெளியான விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தை இயக்கினார். தொடர்ந்து படங்கள் எதுவும் இயக்காத ராஜகுமாரன், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விக்ரம் ஒரு நடிகரே கிடையாது அவருக்கு நடிக்கவே தெரியாது என கடுமையாக விமர்சித்துள்ளார்.

சூரிய வம்சம்,புது வசந்தம், வானத்தைப்போல ,பூவே உனக்காக என பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு பறைசாற்றியவர் இயக்குனர் விக்ரமன். விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராஜகுமாரன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் நீ வருவாய் என.

ராஜகுமாரன் இயக்கத்தில் வெளியான நீ வருவாய் என பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதன் பிறகு வெளியான விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படம் அந்த அளவிற்கு வெற்றிப்படமாக அமையவில்லை. எனவே அதன் பிறகு ராஜகுமாரன் எந்த படத்தையும் இயக்கவில்லை. நீண்ட இடைவேளைக்கு பிறகு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் காமெடியனாக நடித்து அறிமுகமான ராஜகுமாரன் கடுகு படத்தில் ஹீரோவாக நடித்திருப்பார்.

இந்நிலையில், ராஜகுமாரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விக்ரம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். திரைத் துறையில் தான் பயணித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வந்த ராஜகுமாரன் ஒரு கட்டத்தில் விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் நடிக்கும்போது சரத்குமாருக்கும் தனக்கும் வெட்டுகுத்து லெவலில் மிகப்பெரிய பிரச்சினை இருந்தது உண்மைதான். ஆனால் விக்ரமுடன் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை இன்றும் நாங்கள் நண்பர்களாக தான் இருக்கிறோம். ஆனால் நடிகர் விக்ரம் ஒரு பேட்டி ஒன்றில் விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் எனக்கு பிடிக்கவில்லை என கூறியிருந்தார். அந்த படம் நடித்த பொழுது விக்ரம் அவ்வளவு பெரிய நடிகர் ஒன்றுமில்லை. அவருக்கு நடிக்கவே தெரியாது.

இவ்வாறு விக்ரமை இயக்குனர் ராஜகுமாரன் கடுமையாக விமர்சித்துள்ள அந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *