திமுக ஆட்சி பொறுப்பேற்று முதலாம் ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆளுநரின் வாழ்த்துச்செய்திக்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார் .
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
உங்களது ஆட்சியின் கீழ் தமிழக மக்கள் வளம் மற்றும் மகிழ்ச்சியடைவார்கள் என நம்புகிறேன். வெற்றியின் பாதையில் பல உயரங்களை எட்டி, நாட்டிலேயே முதன்மை மாநிலமாக திகழ வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நல்ல உடல்நலத்துடன் மக்கள் சேவையில் தொடர்ந்து பணியாற்ற எனது வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும் என்று ஆளுநர் தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், திமுக அரசின் ஓராண்டு நிறைவை ஒட்டி வாழ்த்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மாநிலத்தில் நம் நல்லாட்சி ஓர் ஆண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு ஆளுநர் தெரிவித்த வாழ்த்துகளுக்கும், பாராட்டிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.