

மதுரையில் தனிக்குடித்தனத்திற்கு அழைத்த மனைவியை கொலை செய்து விட்டு கணவன் காவல்நிலையத்தில் சரண்டர் அடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை நியூ எல்லீஸ்நகர் ஆர்.சி.சர்ச் தெரு பகுதியை சேர்ந்த நாகவேல் என்பவர் பெயிண்டராக வேலை பார்த்துவருகிறார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக சுதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து தனது தாய், தம்பி ஆகியோருடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்துவந்துள்ளார். இதனிடையே கணவன், மனைவி இடையே தனிக்குடித்தனம் செல்வது குறித்து அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் தொடர்பாக நேற்றிரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் மனைவி சுதாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் கணவர் நாகவேல் சரண்டர் ஆகிய நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
திருமணமான 3 மாதத்தில் மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.