• Fri. Apr 26th, 2024

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் முன்னாள் மாணவர் அமைப்பு தொடக்கம்..!

Byஜெபராஜ்

Dec 31, 2021

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளியில், 1988ஆம் ஆண்டு பள்ளி இறுதியாண்டு படித்த மாணவர்கள் சார்பாக முன்னாள் பள்ளி மாணவர் அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பாக நகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.

அதன்படி கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதாரம் போன்றவற்றில் புளியங்குடி நகரை மேம்படுத்துவதற்காக நகரின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ச்சியாக மருத்துவ முகாம்களை நடத்துவது, மரக்கன்றுகளை நடுவது, பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை தடையின்றி தொடங்க உதவுவது, டிஎன்பிஎஸ்ஸி போன்ற போட்டித்தேர்வுகளில் பங்குபெறும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி மையம் தொடங்குவது மற்றும் விடுபட்ட முன்னாள் மாணவர்களை இணைப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


இந்நிகழ்வில் தொழிலதிபர்கள் ஜேம்ஸ், குலசி கந்தசாமி, செய்யதுசாகுல் ஹமீது, ஜெயநாராயணன், சங்கரநாராயணன், செல்வகுமார், வெங்கடேஷ், சிவசுப்பிரமணியன், அபுதாஹிர், மாணிக்கம், மருத்துவர்கள் குமாரவேல், அப்துல் காசிம், ஆசிரியர்கள் மணிகண்டன், பொன்னுத்துரை , வியாகப்பன், வேல்முருகன், அனந்தகுமார், மாரியப்பன், தினகரன் குருசாமி, சங்கர், பண்டாரம் செல்வராஜ், முருகேசன், உமாசங்கர், சுரேஷ், பாலசுப்பிரமணியன், வேலுச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர். அமைப்பின் சார்பாக 35 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் பல சாதனைகளை படைத்துவரும் அந்தோணிச்சாமி அவர்களை பாராட்டும் விதமாக அவரது மகனும் தொழிலதிபருமான ஜேம்ஸ் அவர்கள் அமைப்பின் சார்பாக கௌரவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *