• Wed. Mar 22nd, 2023

அமெரிக்காவை சுழன்று சுழன்று தாக்கிய சூறாவளிகள்:அதிகரிக்கும் உயிரிழப்புகள்

அமெரிக்காவில் முப்பதுக்கும் மேற்பட்ட சூறாவளிகள் தொடர்ந்து தாக்கியதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் கென்டகி, ஆர்கன்சஸ், இல்லினாய்ஸ் உள்பட சில மாகாணங்களில் 30 சூறாவளி புயல்கள் திடீரென தாக்கின. இதில் ஆறு மாகாணங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியிலுள்ள ஏராளமான கட்டடங்கள், தொழிற்சாலைகள், உள்ளிட்டவை உருகுலைந்துள்ளது.

வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்துள்ளன. சூறாவளி தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் அமெரிக்க வரலாற்றில் மிகவும் மோசமான சூறாவளி இது என்றும் கூறப்படுகிறது. பாதிக்கபப்ட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சூறாவளி காற்று காரணமாக மேபீல்டு நகரத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று இல்லினாய்சில் மாகாணத்தில் உள்ள அமேசான் குடோனை சூறாவளி தாக்கியதாகவும், அங்கு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கென்டகியில் உள்ள மெழுகுவர்த்தி ஆலை ஒன்று புயலால் பாதிப்படைந்துள்ளதாகவும் அங்கு 110 பேர் இருந்ததாகவும் இடஹ்னால் உயிரிழப்பு கூடுதலாக இருக்கக் கூடும் என அஞ்சுவதாகவும் ஆளுநர் ஆண்டி பெஷீர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *