• Mon. Jul 13th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஆட்சியர் அருணா தலைமையில் மனித சங்கிலி வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்..,

Byமுகமதி

Mar 18, 2026

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் -2026 ஐ முன்னிட்டு வாக்காளர்கள் அனைவரும் 100% விடுதலின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா அவர்கள் தலைமையில்,183 அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் கிராமத்தில் மனித சங்கிலி வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் முத்துக்குடா கிராமத்தில் மணல் சிற்பம் அமைத்து வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி நிகழ்விற்கு அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அபிநயா முன்னிலை வகித்தார்.மேற்படி நிகழ்வில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மலதா,ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் சுரேஷ் தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன் ஆவுடையார்கோவில் தாலுகாவை சார்ந்த அனைத்து வருவாய் ஆய்வாளர்கள், நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலக அனைத்து நிலை அலுவலர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.