• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சார்ஆட்சியர் அலுவலகத்தை ஆதி திராவிட மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு..,

ByP.Thangapandi

Oct 7, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேக்கிழார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட புதுப்பட்டி பகுதியில் மாமரத்துப்பட்டி, மேக்கிழார்பட்டி, அன்னபாரிபட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மக்களுக்கு கடந்த ஆட்சியில் 153 இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.,

இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கிய பயனாளிகளுக்கு முறையாக இடத்தை அளவிடு செய்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.,

கடந்த வாரம் முறையாக அளவீடு செய்து தரப்படும் என வட்டாட்சியர் அலுவலகத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.,

இந்த நிலையில் முறையான பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை இடத்தை அளவீடு செய்து தர வேண்டுமென சுமார் 60 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் பொதுமக்கள் திடீரென உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,

தகவல் அறிந்து சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார் தலைமையில் வருவாய்த் துறையினர் ஆதிதிராவிடர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாளை பயனாளிகளுக்கு முறையாக இலவச வீட்டு மனை பட்டா வைத்துள்ளவர்களுக்கு முறையாக அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.,

இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கியும் 3 ஆண்டுகளுக்கும் மேலாக இடத்தை அளவிடு செய்யாததை கண்டித்து உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆதிதிராவிடர் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,