• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியின் மருத்துவக் கனவை நினைவாக்கிய த. வெ. க நிர்வாகிகள்..,

ByK Kaliraj

Oct 7, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இராவுத்தன்பட்டியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி யாக்கோபுவின் மகள் சித்ராதேவி மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் தொடர்ந்து முயற்சி செய்து, மூன்றாவது முறையாக நீட் தேர்வில் 462 மதிப்பெண்கள் பெற்றார்.

மருத்துவக் கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், முதலாம் ஆண்டு கல்விக் கட்டணத்தை குடும்பத்தால் திரட்ட முடியாததால், அவரது மருத்துவக் கனவை தொடர முடியாமல் தவித்து வந்தார்.

இதையடுத்து, தமிழக முதல்வர் C. ஜோசப் விஜய் அவர்களிடம் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை ழுந்தது . இந்தக் கோரிக்கையை அறிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, சாத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் தங்கமுனியராஜா மனோகரன், இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் கழக நிர்வாகிகள் அந்த மாணவியின் மருத்துவ கனவை முன்னெடுத்து உதவ வந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த MGS Enterprises நிறுவனத்தின் G. பாலமுருகன் மாணவி சித்ரா தேவியின் முதலாம் ஆண்டு மருத்துவக் கல்விக்காக ரூ.4.50 லட்சம் வழங்கினார். மேலும், அவரது முழு மருத்துவப் படிப்பிற்கான கல்விச் செலவையும் ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

பொருளாதாரம் தடையாக நின்ற இடத்தில் மனிதநேயம் கரம் கொடுத்துள்ளது; சித்ராதேவியின் மருத்துவர் கனவுக்கு இன்று புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.