• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

2 மாதங்களாக முதியோர் உதவித்தொகை வரவில்லை என வேதனை தெரிவிக்கும் முதியவர்கள்..,

ByS. SRIDHAR

Oct 6, 2026

கடந்த இரண்டு மாதங்களாக முதியோர்உதவித் தொகை வங்கிக் கணக்கில் ஏறவில்லை என்று கூறி ஐம்பதுக்கு மேற்பட்ட முதியவர்கள் புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ள நிலையில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருக்கு புகார் அளித்து தகவல் அளித்தனர் முதியவர்கள் இதனை தொடர்ந்து எம்எல்ஏ தாசில்தார் மூலத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை செய்ததில் தற்போது வட்டாட்சியர் அலுவலகத்தில் வந்திருக்கக்கூடிய முதியவர்களுக்கு தபால் நிலையத்தில் புதிதாக கணக்கு தொடங்கும் பணி தபால் நிலைய ஊழியர்களை வைத்து நடைபெற்று வருகிறது.

இரண்டு மாதங்களாக முதியோர் உதவித்தொகை வராததால் பல்வேறு இன்னல்களை முதியோர் சந்தித்து வருவதாக முதியவர்கள் வேதனை தெரிவித்தனர்.

அதிகாரிகளிடம் எம் எல் ஏ கேட்கும் போது ஏற்கனவே வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட முதியோர் உதவித்தொகை வங்கி கணக்கில் ஆதார் புதுப்பிப்பு செல்போன் எண் புதுப்பிப்பு கைரேகை புதுப்பிப்பு உள்ளிட்டவைகள் முறையாக மேற்கொள்ளாததால் சிலருக்கு முதியோர் உதவித்தொகை வங்கி கணக்கில் வரவு வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் முதியோர் உதவித்தொகை கிடைக்காதவர்கள் தற்போது தபால் நிலையம் மூலம் வங்கி கணக்கு தொடங்கி அதற்குரிய ஏடிஎம் அட்டையும் வழங்கி வருவதாகவும் இந்த கணக்கு தொடங்க 200 ரூபாய் தேவை அதில் 175 ரூபாய் கணக்கு தொடங்குவதற்கான ப்ராசஸிங் சார்ஜ் என்றும் மீதமுள்ள 25 ரூபாய் வங்கி கணக்கில் இருக்கும் எனவும் அதிகாரிகள் எம்எல்ஏவிடம் தெரிவித்தனர்.

தொடர்ந்து எம்எல்ஏ அதிகாரியிடம் கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு வரை உயிர் உதவித் தொகை மாதம் தோறும் அவர்களுக்கு கிடைத்தது கிடைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது ஏன் கிடைக்கவில்லை உடனடியாக முறையாக மாதம் தோறும் உதவித் தொகை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரியிடம் ஆவேசமாக கூறியதோடு மாவட்ட ஆட்சியரின் தொடர்பு கொண்டு எம்எல்ஏ உரையாடி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.