• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சாத்தூரில் விஷம் அருந்திய நீதிமன்ற ஊழியருக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByK Kaliraj

Oct 7, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நீதிமன்ற நடுவர் எண் இரண்டில் அலுவலக உதவியாளராக பணிபுரிபவர் சிவகாசி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சரவண வேல் குமார் என்பவரது மனைவி செல்வீஸ்வரி வயது 27

சாத்தூர் நீதிமன்ற நடுவர் எண் 2ன் நீதிபதி வரதராஜன் அலுவலக உதவியாளர் செல்வி ஈஸ்வரி மற்றும் அலுவலக பணியாளர்களை அவரின் வீட்டில் சொந்த வேலைகளுக்கு தொடர்ந்து பயன்படுத்துவதாகவும் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை இடையூறு ஏற்படுத்துவதாகவும் கூறி நேற்று காலை நீதிமன்ற வளாகத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து நீதிமன்ற ஊழியர்கள் சங்கம் அரசு ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்ற ஊழியர்கள் சங்க விருதுநகர் மாவட்ட செயலாளர் தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அலுவலக ஊழியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் நீதிபதி வரதராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தற்கொலைக்கு முயன்ற ஊழியர் செல்வி ஈஸ்வரிக்கு உரிய நீதி வேண்டும் அன்பான உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.