• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் கருத்து..,

Byமுகமதி

Mar 18, 2026

தமிழ்நாடு அளவில் திமுக அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. பொதுவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றால் காவல்துறையின் அனுமதி பெற்று விட்டால் போதுமானதாக இருக்கும்.

ஆனால் இந்த ஆர்ப்பாட்டமானது சட்டமன்ற பொது தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டபடியால் இதற்கான அனுமதி பெற பெற முடியுதோ முடியவில்லையோ தகவல் தெரிவிக்க வேண்டியதும் அனுமதி பெற வேண்டியதும் மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் ஆவர். அவர்கள் அனுமதி கொடுத்தால் நடத்தலாம் இல்லையென்றால் அனுமதியை மீறி நடத்தினால் காவல்துறையை வைத்து கைது செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் தான் இது அனைத்தையுமே அறிந்த அதிமுக தலைமை இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ராஜேஸ்வரி கூறுகையில் தேர்தல் தேதி அறிவித்தாலும் கூட இப்போது தமிழ்நாடு இருக்கும் சூழ்நிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய நிலையில் அதிமுக இருக்கிறது. அதனால்தான் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும். பெண் குழந்தைகள் மட்டுமல்ல ஆண் குழந்தைகளையும் பாதுகாத்து வளர்க்க வேண்டி இருக்கிறது. சிறுவர்கள் சிறுவயதிலேயே போதைப் பழக்கத்திற்கு ஆளாகும் கொடுமை திமுக ஆட்சியில் தான் இருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வளாக கதவு அருகிலேயே போதைப் பொருட்கள் கிடைக்கிறது.

போதைப் பொருள் விற்பவர்களும் அடாவடித்தனம் செய்பவர்களும் காவல் துறையை கவனித்து விடுவதால் இது போன்ற செயல்களை காவல்துறை கண்டு கொள்வதே இல்லை. அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கடந்தாண்டு நிறைய பேர் ஆனதற்கு காரணம் போதை பொருட்கள் தான் என்பதை கல்வித்துறை கண்டுபிடித்து அந்த பள்ளியின் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. திமுக ஆட்சியின் அவலம் இவ்வாறு இருப்பதால்தான் இந்த ஆர்ப்பாட்டத்தை நாங்கள் கட்டாயமாக நடத்த வேண்டி இருந்தது என்றார்.