• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சி தலைவர் துர்காமூர்த்தி ஆய்வு..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு சமூக நீதி பள்ளி மாணவர் விடுதி மற்றும் எரியோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிமை பொருட்களின் தரம், எடை மற்றும் பதிவேடுகளின் பராமரிப்பு குறித்தும், எரியோடு பேரூராட்சியிலுள்ள பாறைகுளம் பகுதியில் கம்பி வேலி அமைத்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது குறித்தும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி ஆய்வு செய்தார்.

இதனை அடுத்து வேடசந்தூர் அரசு சமூக நீதி கல்லூரி மற்றும் பள்ளி மாணவர் விடுதியில் மேம்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள், மாணாக்கர்களின் கற்றல் திறன், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைகள், உணவின் தரம் ஆகியவற்றையும், தட்டாரப்பட்டி ஊராட்சியில் வி.பி.கிராம் ஜி திட்டத்தின்கீழ் தட்டாரப்பட்டி வாய்கால் பகுதியில் மழை காலங்களில் தங்கு தடையின்றி தண்ணீர் செல்வதற்கு ஏதுவாக செடி, கொடிகளை அகற்றி கரைகளை பலபடுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும்.

சீரமைப்பு பணிகள் மற்றும் ஸ்ரீராமபுரம் ஊராட்சியில் ரூ.9 இலட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் வெட்டும் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி ஆய்வு செய்தார். ஆய்வுகளின்போது, வேடசந்தூர் வட்டாட்சியர் ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.