இந்தியாவில் இதுவரை 8 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் குரங்கு அம்மையிலிருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதுவரை 75 நாடுகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவிலும் பரவத்தொடங்கியுள்ளது.
குரங்கு அம்மையில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- * குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவரை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும். * இரு கைகளையும் அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் அல்லது கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். இதையும் படியுங்கள்: மலேசியாவில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வந்த 2 பயணிகள் கைது * குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் இருந்தால் முக கவசம் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும். * குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் படுக்கைகள், துணிகள், பொருட்களை பயன்படுத்தக்கூடாது. * நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் துணிகளை, பாதிக்கப்படாதவர்களின் துணிகளுடன் சேர்த்து துவைத்தல் கூடாது. * குரங்கு அம்மை அறிகுறி இருப்பவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குரங்கு அம்மையில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி?
