• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வெம்பக்கோட்டையில் பண்டையகால தங்க அணிகலன் கண்டெடுப்பு

ByA.Tamilselvan

Aug 3, 2022

வெம்பக்கோட்டையில் அழகிய வேலைப்பாடுடன் பண்டையகால தங்க அணிகலன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வெம் பக்கோட்டை அருகே வைப்பாற் றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பள விலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடை பெற்று வருகின்றன. இந்த நிலையில் வெம் பக்கோட்டை அகழாய்வு பணியில் அவ்வப்போது பல்வேறு பொருட் கள் கிடைத்த நிலையில் இதற்கு முன்னால் சுடு களிமண்ணால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய குடுவை மற்றும் யானைத்தந்தத்தினால் செய்யப் பட்ட அழகிய வேலைப்பாடுகளு டன் கூடிய கழுத்தில் அணியப் பட்ட பதக்கம், புகைக்கும் குழாய் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டறி யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து திங்களன்று பழங்காலத்தில் பண் டைய கால மக்கள் அழகிய வேலை பாடுகளுடன் கூடிய தங்க நகை கள் அணிந்ததற்கு உண்டான சாட்சிய கூறுகளுடன் அடங்கிய தங்க அணிகலன் கண்டெடுக்கப் பட்டுள்ளது. இந்தக் பொருட்கள் சுமார் 2000 ஆண்டு களுக்கு முந்தைய காலத்திற்கு உட்பட்ட பொருளாக இருக்கும் என தொல்லியல் ஆர்வலர்கள் தெரி விக்கின்றனர்.