• Thu. Mar 28th, 2024

பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

ByA.Tamilselvan

Feb 1, 2023

பாராளுமன்றத்தில் இன்று 2023-24 -ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை 5 முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என சில அம்சங்கள் பார்க்கலாம்.
63,000 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மீனவர்கள் நலன், மீன்பிடிப்பு துறை வளர்ச்சிக்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் மருத்துவ கல்லூரிகளுக்கு அருகில் 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன .வேளாண், கால்நடை பராமரிப்பு, மீன் மற்றும் பால்வளத்துறைகளுக்கு ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு. சேமிப்பு கிடங்குகள் பரவலாக்கத் திட்டம் செயல்படுத்தப்படும் 2047-ம் ஆண்டிற்குள் ரத்த சோகை நோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கர்நாடகாவில் வறட்சி நிலவும் பகுதியில் மேற்கு பத்ரா திட்டத்தை செயல்படுத்த ரூ.5,300 கோடி நிதி ஒதுக்கீடு பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு. பழங்குடியினர் மேம்பாட்டிற்கு ரூ.15 ஆயிரம் கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். பழங்குடியினருக்கான ஏகலைவா பள்ளிகளில் 38,800 ஆசிரியர்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நியமிக்கப்படுவார்கள். மூலதன செலவினங்களுக்கான முதலீடு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு சாலை பணிகளுக்காக ரூ.75,000 கோடி ஒதுக்கீடு பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்த 50 விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்படும் ரெயில்வே துறைக்கு ரூ.2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி உருவாக்கப்படும்.
மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிக்க புதிய இயந்திரங்கள் வாங்கப்படும் செயற்கை நுண்ணறிவிற்காக மேன்மைமிகு கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட உள்ளன. தரவு மேலாண்மை கொள்கை வகுக்கப்படும் 9.6 கோடி சமையல் எரிவாயு கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன அரசின் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும் மாநிலங்களுக்கு 50 ஆண்டுகளில் திருப்பி செலுத்தும் வகையில் வழங்கப்படும் வட்டி இல்லா கடன் வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படும் பொறியியல் துறையில் 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை பட்ஜெட் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *