• Tue. Jun 23rd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

அமெரிக்காவில் வீடு புகுந்து துப்பாக்கிச் சூடு : 5 பேர் பலி..!

Byவிஷா

May 1, 2023

அமெரிக்காவில் வீடு புகுந்து இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் பலியான சம்பவனம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த முப்பத்தி ஒன்பது வயதுடைய நபர் ஒருவர் இரவு நேரத்தில் தனது வீட்டின் முற்றத்தில் நின்று கொண்டு வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தார். இதனால் அவரின் அண்டை வீட்டுக்காரர்கள் தூங்க முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் அந்த வீட்டில் இருந்த நபர்கள் வெளியே வந்து துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்த அந்த நபரிடம் நிறுத்தும்படி கூறினர்.
இதனால் இருதரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர் துப்பாக்கியுடன் அண்டை வீட்டிற்குச் சென்று கதவை தட்டினார். வீட்டில் இருந்து வெளியே வந்த பெண் ஒருவர் கதவை திறந்தார். அவரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய அந்த நபர் வீட்டுக்குள் சென்று கண்ணில்பட்டவர்களை எல்லாம் சுட்டு தள்ளினார். இதில் மூன்று பெண்கள், எட்டு வயது சிறுவன் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதன் பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.