கரூரில் நடைபெற்ற நிகழச்சியில் மக்களிடம் மைக்கை நீட்டி பாருங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கரூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் மு .க.ஸ்டாலின் கலந்துகொண்டு 80 ஆயிரத்து 755 பயனாளிகளுக்கு ரூ.500.83 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ரூ.518.44 கோடியில் 99 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். அது மட்டுமில்லாமல் ரூ.28.60 கோடியில் முடிவுற்ற 95 திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர் “உன்னுடைய ஆட்சியில் மகிழ்ச்சியாக இருக்கிறோம் “என்று இங்கு வந்திருக்கும் மக்களின் முகங்களே சொல்கின்றன. அக்கப்போர் மனிதர்களின் அரைவேக்காட்டு விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஊடகங்கள் யார்யாரிடமோ போய் மைக்கை நீட்டுகிறீர்கள். மக்களிடம் போய் மைக்கை நீட்டி பாருங்கள். திமுக ஆட்சியை பற்றி அவர்கள் சொல்வார்கள் என்று பேசினார்.
