• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ் தொண்டர்கள் அதிரடி- அதிர்ச்சியில் இபிஎஸ்

ByA.Tamilselvan

Jul 2, 2022

சேலத்தில் ஓபிஎஸ் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்களால் அதிர்ச்சியில் இபிஎஸ் தரப்பு இருப்பதாக தகவல்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துவருகிறது. ஓபிஎஸ்,இபிஎஸ் இடையே தினம்தோறும் அறிக்கை போர் நடைபெற்றுவருகிறது எனலாம்.கட்சியின் நிர்வாகிகள் இபிஎஸ் பக்கம் இருந்தாலும் தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கமே இருப்பதாக தெரிகிறது. தமிழக முழவதும் ஓபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் இபிஎஸ் கோட்டையாக கருதப்படும் சேலம் முழவதும் ஓபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுக வில் ஒற்றைத்தலைமை விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியது முதல் இப்போது வரை ஓபிஎஸ்,இபிஎஸ் இடையே போஸ்டர் யுத்தம் நடைபெற்று வருகிறது.சமீபகாலமாக கட்சியில் இபிஎஸ் கையே ஓங்கியிருந்த நிலையில் தற்போது எடப்பாடியின் சொந்தமாவட்டமான சேலத்திலேயே ஓபிஎஸ்க்கு ஆதரவு பெருகுவது இபிஎஸ் வட்டாரத்தில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.