• Thu. Jul 2nd, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுங்கள்..

ByA.Tamilselvan

Jul 22, 2022

75 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி எற்றவேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. 75-வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் விதமாக ‘அசாதி கா அம்ரித் மோட்சாவ்’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.
அந்த நிகழ்ச்சிகளில் ஹர் ஹார் ட்ரையாங்கா (ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி) என்ற நிகழ்ச்சிக்கும் மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.இந்நிலையில், சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த ஆண்டு நாம் ‘அசாதி கா அம்ரித் மோட்சாவ்’ நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதை ஹர் ஹார் ட்ரையாங்கா (ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி) இயக்கம் மூலம் மேலும் வலுப்படுத்துவோம்.
எனவே, ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை உங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுங்கள். இந்த இயக்கம் தேசியக் கொடியுடனான நமது இணைப்பை மேலும் அதிகரிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.