நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள சுற்றுவட்டார பகுதிகளில் ரகசியமாக குட்கா விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து ராசிபுரம் காவல் ஆய்வாளர் சரவணண் தலைமையில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, ராசிபுரம் கடைவீதி, போடிநாயக்கன்பட்டி, ஆண்டகளூர்கேட் உள்ளிட்ட பகுதிகளில் மறைமுகமாக குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததில் அர்ஜுன்குமார் , சேக்மைதீன், முகைதீன் அப்துல்காதர் போன்ற 3 பேரை அவர்களிடமிருந்து 20 குட்கா பறிமுதல் செய்தனர்.
மேலும் வாழப்பாடியைச் சேர்ந்த மனோஜ்குமார் மற்றும் சங்கர் ஆகியோர் இருசக்கர வாகனத்தை திருடிசென்றது தெரியவந்தது . இந்நிலையில் போலீசார் இவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.