தமிழக அரசு மொட்டைக்கு காசுயில்லை என அறிவித்த நிலையில், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் மொட்டை போடுவதற்கு பக்தர்களிடம் அடாவடியாக ரூ100 வசூல் செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் மொட்டை போடுவதற்கு பணம் வசூல் செய்யாமல் இலவசமாக மொட்டை போட வேண்டும் என தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு நேத்திக்கடன் செலுத்த வந்த பக்தர்களிடம் நபர் ஒன்றுக்கு அடாவடியாக 100 ரூபாய் கொடுத்தே ஆக வேண்டும் எனக் கூறி வசூலித்துள்ளனர்.
இதனையடுத்து, மொட்டை போட பணம் வசூல் செய்யும் நபர்கள் மீது கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.