நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட, நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் பயணம் செய்து குறைந்த நேரத்தில் சென்னையைச் சென்றடைந்தது வைகை எக்ஸ்பிரஸ். ஏறக்குறைய 44 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சாதனையை வைகை எக்ஸ்பிரஸ் முறியடித்திருப்பதாக ரயில் ஆர்வலர்கள் பெருமிதம் அடைந்துள்ளனர்.
மதுரையிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து மதுரைக்கும் பகல் நேர விரைவு ரயிலாக பயணிகளுக்குப் பெரும் சேவையாற்றி வரும் வைகை எக்ஸ்பிரஸ், கடந்த 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் துவக்கி வைக்கப்பட்டது. தற்போது வரை 44 ஆண்டுகளாக மதுரை மக்களின் ரயில் பயணத்திற்குப் பெரும் சேவையாற்றி வருகிறது.
ஒவ்வொரு நாளும் மதுரையிலிருந்து வழக்கமாக காலை 7.05 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.30 மணிக்கு சென்னையைச் சென்றடையும். மொத்த பயண நேரம் 7 மணி 25 நிமிடங்கள். அதேபோன்று சென்னையிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு வந்து சேரும். மொத்த பயண நேரம் 7 மணி 35 நிமிடங்கள்.
இந்நிலையில் நேற்று (03/03/22) மதுரையிலிருந்து காலை 7.05 மணிக்குப் புறப்பட வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ், இயந்திரக் கோளாறு காரணமாக காலை 7.26க்குப் புறப்பட்டது. ஆனால் சென்னைக்கு சென்றடைய வேண்டிய வழக்கமான நேரமான பிற்பகல் 2.30க்கு முன்னரே 2.07க்கு சென்னை எழும்பூரைச் சென்றடைந்து, மதுரை-சென்னை இடையேயான 497 கி.மீ. தூரத்தை 6 மணி 40 நிமிடங்களில் கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து ரயில் ஆர்வலர் அருண்பாண்டியன் தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், ‘இந்திய ரயில்வேயில் இந்த பயண தூரம் வரலாற்று சாதனையாகும். மேலும் வைகை எக்ஸ்பிரஸ் அது துவங்கப்பட்ட நாளான 1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் 7 மணி நேரம் 5 நிமிடங்கள் ஓடி சாதனை படைத்திருந்த நிலையில், வைகை எக்ஸ்பிரஸ்க்கு என்று ரயில்வேயால் நிர்ணயம் செய்யப்பட்ட அதே 110 கி.மீ. வேகத்தில் நேற்று 6 மணி 40 நிமிடங்களில் சென்னை எழும்பூரைச் சென்றடைந்தது வரலாற்று சாதனையாகும்.
வடமாநிலங்களில் சில எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு மணிக்கு சராசரியாக 130 கி.மீ. நிர்ணயம் செய்யப்பட்டு, ஓடிக் கொண்டிருக்கின்றன. தற்போது எக்ஸ்பிரஸ் ரயில்களின் பயண நேரத்தைக் குறைப்பதற்கு ரயில் பயணிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். நேற்றைய தினம் வைகை எக்ஸ்பிரஸ்சின் நிர்ணயிக்கப்பட்ட பயண நேரத்திலும் நிர்ணயிக்கப்பட்ட வேகத்திலும்கூட குறைந்த நேரமானதற்கு மிக முக்கியக் காரணம், தென்னக ரயில்வேயின் மதுரை, திருச்சி மற்றும் சென்னைக் கோட்டங்களின் நிர்வாக மற்றும் தொழில்நுட்த் திறமையே அடிப்படைக் காரணம். 300 கி.மீ தூரத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் 25 நிமிட தாமதத்தைச் சரி செய்து தெற்கு ரயில்வே சாதனை படைத்திருக்கிறது. ரயில்வேயின் அனைத்து துறைகளுடைய ஒருங்கிணைப்பின்றி இது சாத்தியமில்லை’ என்றார்.
சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் 7 மணி நேரமும் சென்னையில் இருந்து மைசூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் 497 கிலோ மீட்டர் தூரத்தை 7 மணி நேரமும் கடக்கின்றன. ஆனால் வைகை எக்பிரஸ் விட இந்த ரயில்களில் நிறுத்தங்கள் மிக குறைவாகும். தமிழ்நாட்டில் ஓடும் இந்த ரயில்களோடு ஒப்பிடும்போது வைகை எக்ஸ்பிரஸ் சாதனைக்குரிய தொடர்வண்டி ஆக தன் பெருமையை இன்றும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.

- குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒரிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி.தி மு க வின் தலைவர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அகவை 100_வது தினத்தை மிக […]
- ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ரயில் விபத்து நடந்துள்ளது -தொல்.திருமாவளவன் பேட்டிஅரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகத்தான் புதிய பணியாளர் […]
- ஒடிசாவுக்கு விமான டிக்கெட் ரூ.4000 விருந்து ரூ.80,000” மாக அதிகரிப்பு – சு. வெங்கடேசன் எம்.பி ஆவேசம்ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து நேரத்தில் தனியார் விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளதாக […]
- ஜூன் 7ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.200க்கும் மேற்பட்டோர் உயிழந்த […]
- குமரியிலிருந்து காஷ்மீர் நோக்கி மோட்டார் சைக்கிளில் பெண் துறவியின் பயணம்கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு ஆத்ம சித்தர் லெட்சுமி அம்மா இருச்சக்கர வாகனத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் தொடங்கினார். […]
- சென்னையில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி , நூல் வெளியீட்டு விழாசென்னையில் சிறப்பாக நடைபெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி – 2023திரை […]
- மாரிசெல்வராஜ் அரசியல் ஜெயிக்க வேண்டும் – கமல்ஹாசன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமனம்மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டார். மீனாட்சி அம்மன் கோவில் […]
- துரிதம்… தேடலா!!! தேர்ச்சியா !!! திரைவிமர்சனம்சினிமா என்ற ஒரே கோட்டில் நின்று தான் எல்லோரும் குறி பார்த்து வெற்றியை நோக்கி சுடுகிறார்கள் […]
- வீரன் திரைவிமர்சனம்’மரகத நாணயம்’ என்ற ஒரு ஃபேண்டஸி கதைக்களத்தை படமாக்கி அதில் வெற்றியும் பெற்ற ஏ.ஆர்.கே.சரவனின் அடுத்த […]
- ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர் தகவல்நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் க ண்டறிப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை நோக்கி […]
- மாமன்னனில் வடிவேலு கரை சேருவாரா?மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்இருந்தபோதிலும் […]
- காதர்பாட்சா@முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்புரியுதானு பாருங்க!ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட […]
- மதுரை விமானநிலையம் கூகுள் மேபில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என உள்ளதால் சர்ச்சைமதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என கூகுள் மேப்பில் பெயர் பதிவாகியுள்ளதால் […]
- காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா போராட்டம் – விஜய் வசந்த் எம் பி பங்கேற்புமத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் […]