• Mon. Apr 21st, 2025

ஷேன் வார்னே அறையில் ரத்தக் கறைகள்?

மறைந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே தங்கியிருந்த அறையில் ரத்தக் கறைகள் காணப்பட்டதாக தாய்லாந்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற ஷேன் வார்னே, மார்ச் 4ம் தேதி Koh Samui-யில் அவர் தங்கியிருந்த வில்லா அறையில் மாரடைப்பால் காலமானார். இந்நிலையில், சனிக்கிழமை இரவு செய்தியாளர்களை சந்தித்து தாய்லாந்து போலீஸ் அதிகாரி Yuthana Sirisombat, வார்னேவுக்கு ஏற்கனவே இதய பிரச்சினை மற்றும் ஆஸ்துமா இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக கூறினார்.

52 வயதான ஷேன் வார்ன், சமீபத்தில் இதய பிரச்சினை தொடர்பாக மருத்துவரிடம் சென்றுள்ளார். குடும்பத்தினர் அளித்த தகவல் மற்றும் சிசிடிவி ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது, அவரது மரணத்தில் எந்தவித சந்தேகமுல் இல்லை என்ற முடிவுக்கு காவல்துறை வந்துள்ளது என Yuthana Sirisombat கூறினார்.

இதனிடையே, ஷேன் வார்ன் தங்கியிருந்த அறையில் ரத்த கறைகள் காணப்பட்டதாக சூரத் தானி மாகாண காவல்துறை தலைவர் மேஜ்ர் ஜெனரல் Satit Polpinit தாய்லாந்து செய்தித்தாளான Matichon இடம் கூறினார். ஷேன் வார்னுக்கு சிபிஆர் சிகிச்சை தொடங்கிய போது, அவருக்கு இருமல் மற்றும் இரத்தப்போக்கு இருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.