கனல் கண்ணன் கைதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்து முன்னணி சார்பில் சென்னை மதுரவாயல் பகுதியில் நடைபெற்ற இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயண நிறைவு விழாவில் பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தார். அவரை நேற்று புதுச்சேரியில் போலீசார் கைது செய்தனர்.
இந்து முன்னணி கலை இலக்கியப் பிரிவு செயலாளர் கனல் கண்ணன் கைது செய்ததை கண்டித்து கருமத்தான்பட்டி நால் ரோட்டில் ரோட்டில் இந்து முன்னணி சாலை மறியல் ஈடுபட்டனர்.அப்போது போலீசார் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் Rm சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ராஜ்குமார் சர்வேஸ்வரன் லோகநாதன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மோகன் மதன் செல்வகுமார் இன்றைய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.