

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி ஆகிய மூன்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற 3 சாலை விபத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் பலி. கார் மோதியதில் நேசமணிநகர் காவல் நிலைய எஸ்.ஐ. படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு வரை ஒரு நாளில் 40 -க்கும் மேற்பட்ட விபத்துக்களும் நடைபெற்றுள்ளது. இதில் பூதப்பாண்டி அருகே பெருந்தலைகாடு பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் எட்வின் அவரது நண்பர் விஜின் இருவரும் நேற்று முன்தினம் இரு சக்கர வாகனத்தில் ஊரில் இருந்து கடுக்கரை நோக்கி சென்று கொண்டு இருந்த போது குறத்தியறை பகுதியில் எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதி நான்கு பேர்களும் தூக்கி வீசபட்டதில், சம்பா இடத்திலே பிளஸ் 2 மாணவர் எட்வின் பலியானார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது நண்பர் விஜின் சிகிக்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இதே போல் ஆரல்வாய்மொழி சரகத்திற்கு உட்பட்ட விசுவாசபுரத்தில் இருசக்கர வாகனம் மற்றும் நெல்லையில் இருந்து நாகர்கோவில் வந்து கொண்டிருந்த அரசு பஸ் மீது எதிர்பாராதவிதமாக மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்த கல்லூரி மாணவர் ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே பலியானர். உடன் வந்த மற்றொருவர் கூலித்தொழிலாளி சாந்தகுமார் படுகாயமடைந்தார், இவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல் மேலபுத்தேரியை சேர்ந்த நேசமணி நகர் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நீலகண்டன் மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்று கொண்டிருக்கும் போது மேல புத்தேரி மேம்பாலம் அருகே தாறுமாறாக ஓடி வந்த கார் மோதியதில் எஸ்.ஐ. நீலகண்டன் படுகாயம் அடைந்தார். மேலும் கார் தலைகீழாக கவிழ்ந்ததில் காரில் இருந்த விஷ்ணு, கணேஷ் ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 3 பேரையும் சிகிட்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நீலகண்டன் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இதுகுறித்து பூதபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் தளவாய் புரம் ஜோஸ் காலணியை சேர்ந்த ஆட்டோ ஒட்டுனர் அமலதாஸ் தன் ஆட்டோவில் கோணம் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது எதிரே வந்த ஆட்டோவில் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த அமலதாஸ் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், ஆரல்வாய்மொழி , பூதப்பாண்டி ஆகிய மூன்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற 3 சாலை விபத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர்கள் பலியான சம்பவம் போக்குவரத்துக்கு போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
