

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் 112 டாஸ்மார்க் கடைகள் உள்ளன இந்த கடைகள் மூலம் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த டாஸ்மார்க் பார்கள் திறக்கப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் சிரமமின்றி உற்சாகமடைந்தனர். இந்நிலையில் இந்த கடைகள் மூலம் தினசரி மூன்று கோடி ரூபாய் வரை மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், விசேஷ காலங்களில் பண்டிகை காலங்களில் இந்த விற்பனை 4 கோடி இலக்கை அடையும் என்றும் நிர்வாக தரப்பில் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் நடைபெற்ற தீபாவளிப் பண்டிகையை தொடர்ந்து மூன்று நாட்களாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூலம் 15 கோடி ரூபாய் 23 லட்சத்து 69 ஆயிரத்து 650 ரூபாய்க்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டுள்ளது இந்த விற்பனை கடந்த ஆண்டைவிட 36 லட்சம் ரூபாய் விற்பனை சரிவு என்றும் தெரிவித்துள்ளனர்.