தலைநகர் டெல்லியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை தொடர்வதால் விமானங்கள் தரையிரங்குவது, புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லி நகரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல பகுதிகள் தனித்தீவுகளாக மாறியுள்ளன. பல முக்கியமான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் இன்று காலை டெல்லியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. கனமழையால் டெல்லியில் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் சாலை போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. அத்துடன் சில இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் சூறைக்காற்றுடன் பலத்த மலை பெய்து வருவதால் டெல்லியில் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.