• Wed. Mar 19th, 2025

அசாமில் கனமழைக்கு 25 பேர் உயிரிழப்பு

ByA.Tamilselvan

May 23, 2022

அசாமில் தற்போது தொடர்ந்துபெய்து வரும் கனமழையால் வெள்ளித்தில் மிதக்கிறது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சாசர், கரிம்கஞ்ச், நாகோன், திமா கசாவோ உள்ளிட்ட 29 மாவட்டங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 2,585 கிராமங்கள் வெள்ளப் பேரிடரில் சுமார் 8 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில், நகவோன் மாவட்டம் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு சுமார் 3.3 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கச்சார் மாவட்டத்தில் 1.6 லட்சம் பேரும், ஹோஜாய் மாவட்டத்தில் 97,300 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் ராணுவம், துணை ராணுவப் படையினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். இதுவரை 21,884 பேரை மீட்டுள்ளனர். அங்குள்ள திமா ஹசாவோ மாவட்டம் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலை மற்றும் ரயில் மார்க்கங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.