• Sat. Jun 14th, 2025
[smartslider3 slider="7"]

தனுஷ்கோடியில் 58 ஆண்டுகளாக மூழ்கிய தரைபாலம் வெளிப்பட்டது…

Byகாயத்ரி

May 23, 2022

தனுஷ்கோடியில் கடந்த 58 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய தரைப்பாலம் தற்போது வெளியே தெரிய தொடங்கியதை அடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்
தனுஷ்கோடியில் கடல் அரிப்புக் காரணமாக கடந்த 1964 ஆம் ஆண்டு வீசிய புயலில் தரைப்பாலம் ஒன்று மூழ்கியது. அந்த பாலம் இருக்கும் இடமே தெரியாமல் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த நிலையில் தற்போது அந்த தரைப்பாலம் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.இதனை அடுத்து அந்த தரைப்பாலத்தை புகைப்படம் எடுத்து சுற்றுலா பயணிகள் தங்களுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.