• Sat. Oct 12th, 2024

குதுப் மினார்-விஷ்ணுவின் தூணா? விஷ்வ ஹிந்து பரிஷத்

ByA.Tamilselvan

May 23, 2022

உத்தரப்பிரதேச ஞானவாபி மசூதியை தொடர்ந்து குதுப் மினார் விவகாரத்திலும் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாபர்மசூதி இடிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக இந்தியா முழுவதும் குறிப்பாக வட இந்தியாவில் மத மோதல்கள் நடந்தன. இதை தொடந்து தற்போது மேலும் பல இஸ்லாமி கோயில்கள் மீது இந்துமத அமைப்புகள் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்திவருகின்றன.உத்திரபிரதேச ஞானவாபிமசூதி சர்ச்சை வெடித்துள்ள நிலையில் தற்போது டெல்லி குதூப்மினார் விவகாரத்திலும் பிரச்சனைகள் வரதொடங்கியுள்ளன்.
டெல்லியிலுள்ள குதுப் மினாரை குத்புதீன் ஐபக் கட்டவில்லை என்றும் சூரிய ஒளியின் திசை பற்றி ஆராய்வதற்காக ராஜா விக்ரமாதித்யா கட்டியதாகவும் தொல்பொருள் துறையின் முன்னாள் அதிகாரி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.முன்னதாக 27 ஹிந்து கோயில்களை இடித்து அதிலிருந்து பெறப்பட்ட பொருட்களை வைத்து குதுப் மினார் கட்டப்பதாகவும் அது விஷ்ணுவின் தூண் என்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் வினோத் பன்சால் கூறியிருந்தார்.
இவர்களது கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினர் பாஜக தொடர்ந்து இஸ்லாமிய இடங்களை குறிவைத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினர்.
மேலும் குதுப் மினார் பகுதியில் அகழாய்வு நடைபெற உள்ளதாகவும் தகவல் பரவியது. இந்நிலையில், குதுப் மினார் பகுதியில் அகழ்வாய்வு நடைபெறவுள்ளதாக வெளியான தகவலை மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி மறுத்துள்ளார். அதுபோன்ற முடிவை அரசு எடுக்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *