டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தேர்வு துவங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்வில் 22லட்சம் பேர் தமிழகமுழுவதும் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது. அரசு துறைகளில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கு, 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 ஆண்கள், 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பெண்கள், 131 திருநங்கைகள் என மொத்தம் 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். சென்னையில் மட்டும் 503 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தவிர்க்கும் வகையில் பறக்கும் படையினரும், வீடியோ பதிவாளர்களும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். தேர்வு நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.