• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மக்களிடம் வரவேற்பை பெரும் “மக்களை தேடி மருத்துவம்”

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி தொடங்கி வைத்த திட்டம் மக்களை தேடி மருத்துவம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

மக்களை தேடி மருத்துவ திட்டம் மூலம் கிராமங்களில் உள்ள மக்களை தேடிச்சென்று சிகிச்சை வழங்கப்படுகிறது. குறிப்பாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு வீடு தேடி சென்று சிகிச்சை அளித்து மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனால் கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு வெளியில் செல்லாமலேயே நோய்களை தீர்த்துக் கொள்ளும் வசதி கிடைத்து உள்ளது. இதன் காரணமாக இந்த திட்டத்துக்கு சமூக வலைதளங்களில் மாபெரும் வரவேற்பு கிடைத்து உள்ளது.

கடந்த 42 நாட்களில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 9 ஆயிரத்து 430 பேர் பயனடைந்து உள்ளனர். அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 50 ஆயிரத்து 745 பேர் பயனடைந்து இருக்கிறார்கள்.