• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோவை மாவட்டத்தில் சுமார் 2 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்..,

BySeenu

Jul 22, 2026

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில், (21.07.2026) அன்று செட்டிபாளையம் காவல் நிலைய காவல் துறையினருக்கு கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் துறையினர் மயிலேறிபாளையம் to பொள்ளாச்சி சாலையில் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் விஷால் (20) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து சுமார் 2 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், மேற்படி நபரை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்டம்-ஒழுங்கிற்கு எதிராகச் செயல்பட்டாலோ, சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார்.