• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா..,

ByM.I.MOHAMMED FAROOK

Mar 18, 2026

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியில் அமைந்துள்ள ரீஜினல் பர்பெக்ட் மேல்நிலை பள்ளியில் மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்க்கு சிறப்பு விருந்தினராக பள்ளியின் தாளாளர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் தலைமை தாங்கி விழாவினை சிறப்பித்தார். விழாவில் மழலையர் வகுப்பு மாணவர்கள் பட்டமளிப்பு ஆடைகளுடன் வந்தனர்.

தொடர்ந்து பள்ளியின் தாளாளர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி அவர்கள் வாழ்க்கையில் மேன்மேலும் சிறக்க ஆசி வழங்கினார். பட்டங்களை பெற்ற மழலையர்கள் தங்களின் வருங்கால இலட்சியத்தை பற்றி கூறியது அனைவரையும் கவரும் விதமாக இருந்தது.

இந்நிகழ்ச்சயில் பள்ளி முதல்வர் நோயலாசெபாஸ்டியன், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், திரளான பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.