• Tue. Apr 14th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

புதிய பென்சன் திட்டத்தை நிறைவேற்றக் கோரி.., அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் போராட்டம்..!

Byகுமார்

Dec 27, 2021

புதிய பென்சன் திட்டம் உள்ளிட்ட திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.


ஓய்வூதியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டாவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம் எனவும் ஓய்வூதியர் சங்க மாநில நிர்வாகி பேட்டி அளித்துள்ளார்.


அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட 74மாத அகவிலைப்படி உயர்வினை வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டம் ரத்து செய்ய வேண்டும்,

ஓய்வூதியர்களுக்கான அரசு மருத்துவ காப்பிட்டு திட்டத்தை அமல் படுத்த வேண்டும், குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவபடி வழங்க வேண்டும், ஓய்வூதியம் அரசு கருவூலம் மூலம் வழங்க வேண்டும், ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் நல சங்கத்தினர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தங்களது கோரிக்கைகளை ஆட்சியரிடம் மனுவாக அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் 100க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர்.


புதிய பென்சன் திட்டத்தை ரத்து உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை ஸ்டாலின் தற்போது நிறைவேற்ற தயங்குகிறார். ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனர்.

பைட்-1 திரு.தேவராஜ் – மாநில துணைபொதுச்செயலாளர், அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் நல சங்கம்.