
வேலூர் மாநகராட்சி மண்டலம் இரண்டு வார்டு 24 பகுதி-2, 12-வது தெருவில் டெங்கு பணி நடைபெறுவதை சுகாதார அலுவலர் சிவக்குமார் அவர்கள் ஆய்வு செய்தனர்.

மேலும் சுற்றியுள்ள வீடுகளில் உள்ள பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க தங்கள் வீடுகளில் மாடிமேல் இருக்கக் கூடிய உபயோகப்படுத்தாத பொருட்களை மழை நீர் தேங்காதவாறு அகற்றவும், வெளியில் வாங்கும் குடிநீர் குளோரின் உள்ளதா என பார்த்து வாங்கவும், வீட்டில் உபயோகப்படுத்தும் நீர் தொட்டிகளை மூடி வைக்கும் படி அறிவுறுத்தப்பட்டது.

மேலும் தங்கள் வீடுகளில் அருகே உள்ள காலி இடங்களில் நீர்த்தேக்கம் ஏதேனும் இருந்தால் உபயோகமற்ற சமையல் எண்ணெய் ஊற்றி வந்தால் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது…