


இன்று உலகம் முழுவதும் அஜித் நடிப்பில், இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜீவி பிரகாஸ்குமார் இசையில் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியாகியது.
இந்தப்படத்தின் டிரைலர், டீசர் ரசிகர் மத்தியில் உற்சாக வரவேற்பை பெற்றுள்ளதை முன்னிட்டு, திரைப்படத்திற்கு ஆன ரிசர்வேஷன் புக்கிங்களும் ஆரவாரமாக நடைபெற்று வருகிறது.



இன்று திரைப்படத்தை கொண்டாட அஜித் ரசிகர்கள் திரையரங்கில் கட்டவுட் வைத்து கொண்டாட்டத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மதுரையில் 23க்கும் மேற்பட்ட திரையரங்கில் நடிகர் அஜித்குமார் நடித்த குட் பேட் அக்னி திரைப்படம் இன்று வெளியானது. இந்த நிலையில் மதுரையில் அஜித் திரைப்படம் வெளியான திரையரங்குகள் முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் வைத்து பால் அபிஷேகம் செய்து, அஜித் ரசிகர்கள் நடனமாடி பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.


மேலும், அரசரடி பகுதியில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரையரங்கு முன்பு உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்து சாலையை ரவுண்டு அடித்தனர். சிறிது நேரம் போக்குவரத்து ஏற்பட்டது. அஜித் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.



