



உலகம் முழுவதும் அஜித் நடித்த வெளியான குட் பேட் அக்லி திரைப்படம். இன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த நிலையில் முதல் காட்சி இன்று காலை 9 மணி அளவில் அனைத்து திரையரங்குகளும் திரையிடப்பட்டது. மதுரையில் ஜெயம் தியேட்டரில் இன்று முதல் காட்சியில் படம் பார்த்து வந்த ரசிகர்களும் கருத்து கேட்ட பொழுது இது படம் இல்லை அதற்கும் மேல் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது. ஒரு என்டர்டைன்மென்ட் படம் எனவும், மிக, மிக சிறப்பாக இருந்தது எனவும் என கருத்துக்களை தெரிவித்தனர். பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் இடம்பெறும் எனவும், அதிக வசூலை ஈட்டும் எனவும், ரசிகர்கள் தெரிவித்தனர். படம் ஆரம்பம் முதல் கடைசி வரை கைதட்டாமல் எங்களால் இருக்க முடியவில்லை எனவும், ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு வித்தியாசமான தோற்றங்கள் மற்றும் வசனங்கள் என பட்டையை கிளப்பி விட்டார் அஜித் குமார் என ரசிகர்கள் ஆரவாரத்துடன் தெரிவித்தனர்.


