

வாரத்தின் முதல்நாளே தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இதனால் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து 64,440 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குறிப்பாக தமிழகத்தில் காதணி விழா, திருமணம், பிறந்த நாள் என எல்லா விழாக்களும் தங்கம் வாங்குவது வழக்கமாக உள்ளது. அத்துடன் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடாக தங்கம் உள்ளது இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதன் விளைவாக இந்த ஆண்டின தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. பிப்ரவரி 11-ம் தேதி முதல் முறையாக தங்கம் விலை சவரன் 64 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது. ஆனால், அதற்கடுத்த நாட்களில் தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் காணப்பட்டது. கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தங்கம் விலை ஒரு கிராம் 8,045 ரூபாய்க்கும், ஒரு சவரன் 64,360 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து 8,055 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து 64,440 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை எந்தவித மாற்றமும் இன்றி கிராம் ரூ.108க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

