• Mon. Mar 24th, 2025

ஆட்டம் காட்டும் தங்கம் விலை – இன்றைய நிலவரம்

ByP.Kavitha Kumar

Feb 22, 2025

சென்னையில் ஆபரணத் தங்கம் நேற்று விலை குறைந்த நிலையில், இன்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த நான்கு4 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த நிலையில் திடீரென நேற்று சவரனுக்கு ரூ.360 குறைந்து சவரன் ரூ.64,200-க்கு விற்பனையானது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த நிலையில், திடீரென 360 ரூபாய் சவரனுக்கு குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், இந்த நிலையில், இன்று தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளது.

வார இறுதி நாளான இன்று தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 8,04 5ரூபாய்க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 64,360 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்நிலையில், வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.