• Mon. Apr 21st, 2025

தங்கம் விலை திடீர் சரிவு – இன்றைய விலை இதுதான்!

ByP.Kavitha Kumar

Feb 12, 2025

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 7 ஆயிரத்து 940 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கேற்ப தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தைத் தொட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கடந்த 21-ம் தேதி தங்கம் விலை 60 ஆயிரத்தை கடந்து மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர் உயர்வைச் சந்தித்து வந்தது. பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக கடந்த 1ம் தேதி தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்து மக்களை மேலும் அதிர்ச்சியடைய வைத்தது.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 உயர்ந்த நிலையில் நேற்று சவரன் 64 ஆயிரத்து 480 ரூபாய் என்ற புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று திடீரென குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் .7ஆயிரத்து 940 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 63ஆயிரத்து 520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.