• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்வு- இன்றைய விலை நிலவரம்

ByP.Kavitha Kumar

Feb 13, 2025

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் 63ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கேற்ப தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த 21ம் தேதி தங்கம் விலை 60 ஆயிரத்தை கடந்து மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர் உயர்வைச் சந்தித்து வந்தது. மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதன் எதிரொலியாக கடந்த 1-ம் தேதி தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.

இதற்கிடையே, தங்கம் விலை நேற்று குறைந்து சவரனுக்கு 960 ரூபாய்க்கும், ஒரு சவரன் 63 ஆயிரத்து 520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 7ஆயிரத்து 980 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 63 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.