

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கம் 64,560 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தமிழ்நாட்டில் திருமணம், சடங்கு, காதணி விழா மற்றும் பிறந்த நாள் உள்ளிட்ட அனைத்து விசேஷங்களும் தவறாமல் இடம் பெறுவது தங்கம் தான். அதன் விலை கடந்த சில ஆண்டுகளாக ஏழை, எளிய மக்கள் வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது.

சென்னையில் திங்கள் கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 63,520 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து 7,940 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய் கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் இன்று அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் 64,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. .இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் 8,070 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

