• Tue. Dec 10th, 2024

5 மணிக்கு மேல சென்றால் அனுமதி கிடையாது..

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவானது இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.

இதில் கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை 5 மணி முதல் 6 மணி வரை கோவிட்-19 தொற்று அறிகுறி உள்ளவர்கள் மற்றும் தொற்று பாதித்த நபர்கள் மட்டும் வாக்களிக்கலாம் எனவும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால்அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வாக்குப்பதிவின்போது வாக்காளர்கள் 5 மணிக்கு முன்னதாக வந்து வாக்களிக்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் 5 மணிக்கு முன்னதாக வரும் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர்களால் உரிய டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். 5 மணிக்கு மேல் வருபவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மாலை 5 மணி முதல் 6 மணி வரை கோவிட் தொற்று அறிகுறி உள்ளவர்கள் மற்றும் தொற்று பாதித்த நபர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். இவர்கள் தகுந்த பாதுகாப்பு உடை அணிந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சுமார் 2 கோடியே 83 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். மக்கள் வாக்களிப்பதற்காக 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.