
தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஒட்டிகளுக்கு தொப்பி, கூல்டிரிங்க்ஸ் வழங்கிய போக்குவரத்து போலீசார்.
தலைக்கவசம் கட்டாய அணிய வேண்டும் என்ற விதிமுறையை தமிழக காவல்துறை கடுமையாக பின்பற்றி வருகிறது. மேலும் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் வாகனம் ஒட்டினால் சிறார்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களிடை யே தலைக்கவசம் மற்றும் சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள சிக்னலில் தெப்பக்குளம் போக்குவரத்து காவல்துறை சார்பாக போக்குவரத்து ஆய்வாளர் தங்கமணி ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஒட்டிகளிடம் தொப்பி வெயிலை தணிக்கும் விதமாக குளிர்பானம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
