நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பள்ளத்து கருப்பசாமி கோவிலுக்கு 1000 கிலோ எடைகொண்ட அரிவாள் காணிக்கையாக வழங்கப்பட்டது.
ராசிபுரம் அடுத்த பட்டணம் பஞ்சாயத்தில் பிரசித்தி பெற்ற பள்ளத்து கருப்புசாமி கோவில் உள்ளது. இங்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடா வெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஒரே இரவில் மட்டும், ஆயிரக்கணக்கான ஆட்டு கிடாக்கள் வெட்டப்படுவது வழக்கம்.
தற்போது கொரோனா தொற்று காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருவிழா நடைபெறாத நிலையில் நடப்பாண்டு வரும் 26ம் தேதி விழா நடைபெறுகிறது. இக்கோவிலுக்கு பட்டணம் பகுதியைச் சேர்ந்த வள்ளி மருத்துவமனை உரிமையாளர் இராஜா, மனைவி சாந்தி ஆகியோர் 1 டன் எடையும், 21 அடி உயர பிரமாண்ட இரும்பிலான அரிவாள் மற்றும் கை வடிவிலான 5 அடி கொண்ட கிரனைட் பீடம் என மொத்தம் 21 அடி கொண்ட 2 பிரமாண்ட அரிவாளை காணிக்கையாக வழங்கினர். இதனை கிரேன் உதவியுடன் கோவிலின் முன் பூஜைகள் செய்து நடப்பட்டது.