நாமக்கல் மாவட்டம் மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் முன்னோர்கள் வாசம் செய்கிறார்கள் என்று நம்பப்படுவதால், அப்பகுதி மக்கள் அங்கு வருகின்ற குரங்குகளைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
நாமக்கல்லிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில், இந்த கோவில் அமைந்துள்ள மெட்டாலா கணவாயில், இந்த இடம் ஒரு காலத்தில் வனவிலங்குகள் உலவும் வனமாக இருந்தது. இப்பகுதியில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டவுடன் தற்போது அழகான திருத்தலமாக மாறிவிட்டது. கோரைப் புற்களிடையே இங்கு பாயும் காவிரி, திருக்கோயிலுக்கு எதிரே ஓடிக் கொண்டிருப்பதால் கோரையாறு என்ற பெயருடன் இங்கு பாயும் காவிரியாற்றை மக்கள் அழைப்பார்கள்.
நாமக்கல் குடவரைக் கோயில்களைக் கட்டிய அதியன் குணசீலன் என்ற, 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவ மன்னன் உருவாக்கிய கோயில் இது. அப்போது காவல் தெய்வமாக இந்த அனுமன் சிலை செதுக்கப்பட்டிருக்க வேண்டும். என வரலாற்று ரீதியாக நம்பப்படுகிறது. இந்த கோவிலில் முன்னோர்கள் வாசம் செய்கிறார்கள் என்ற நம்பபடுவதால், இக்கோவிலை சுற்றி வரும் குரங்குகளைக் பொதுமக்கள் யாரும் துன்புறுத்துவதில்லை. இங்கே வசிக்கும் குரங்களுக்கு உணவு கொடுப்பதற்காகவே பழம் பொறி கொண்ட கடைகள் இருக்கின்றன. இந்த கோவிலையொட்டி நந்த வனம் ஒன்று அழகாக அமைந்திருக்கிறது. இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி, சரீர பலம், கீர்த்தி, அஞ்சாமை, நோயின்மை, தளர்ச்சியின்மை, வாக்கு சாதூர்யம் முதலியவை கிட்டும் எனவும், ராசிபுரம்-ஆத்தூர் சாலையில் ஆனந்தாயா மலையடி வாரத்தில் இக்கோவில் அமைந்துள்ளதால்,
அவ்வழியே வாகனத்தில் வருபவர்கள், வாகனங்களை நிறுத்தி ஆஞ்சநேயரை வணங்கிவிட்டு வாகனங்களுக்குப் பூஜை செய்துவிட்டு செல்வார்கள்.