சென்னை அப்போலோ மருத்துவமனையின் குழந்தைகள் சிகிச்சை பிரிவு சார்பாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஜெயசேகரன் மருத்துவமனையில் வரும் 13 ம் தேதி குழந்தைகளுக்கான இலவச இருதய நல சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. வெளியில் அறுவை சிகிற்சை செய்ய 2 முதல் 5 லட்சம் வரை ஆகும் அறுவை சிகிற்சைகளை இந்த முகாம் மூலம் இலவசமாக செய்ய பட உள்ளதாக அப்போலோ மருத்துவமனை குழந்தைகள் பிரிவு மருத்துவ நிபுணர் டாக்டர் நெவில் சாலமன் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஜெயசேகரன் மருத்துவமனையின் 56 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கான இலவச இருதய நல சிகிச்சை முகாம் நடத்துகிறது. வரும் 13ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் குழந்தைகளுக்கான மூச்சுத் திணறல், சுவாச கோளாறு போன்ற இருதய பிரச்சனைகளுக்கு இலவசமாக சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஜெயசேகரன் மருத்துவமனையின் இருதய சிகிச்சை நிபுணர்களும் சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவு மருத்துவர்களும் கலந்து கொள்கின்றனர்.
அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.இந்த வாய்ப்பை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மருத்துவ சோதனை செய்து அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஜெயசேகரன் மருத்துவமனை நிர்வாகி டாக்டர் தேவ பிரசாத் தெரிவித்தார். வெளியில் அறுவை சிகிற்சை செய்ய 2 முதல் 5 லட்சம் வரை ஆகும் அறுவை சிகிற்சைகளை இந்த முகாம் மூலம் இலவசமாக செய்ய பட உள்ளதாக அப்போலோ மருத்துவமனை குழந்தைகள் பிரிவு மருத்துவ நிபுணர் டாக்டர் நெவில் சாலமன் தெரிவித்தார்.