மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட கூத்தியார் குண்டு பகுதியில் பாராளுமன்ற தொகுதி நிதியிலிருந்து புதிய சமுதாயக்கூடம் கட்ட அடிக்கல் நட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்.பி செய்தியாளர்களை சந்தித்தார்.
மதுரை தூத்துக்குடி அருப்புக்கோட்டை வழியிலான ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்காததால் பணிகள் நடைபெறவில்லை என கூறிய குற்றச்சாட்டு குறித்து கேள்விக்கு?
.இது ஒரு தவறான தகவல் மத்திய அமைச்சர் பரப்புகிறார். இது குறித்து பாரதப் பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதி உள்ளேன். மேலும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரும் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது மத்திய அரசின் ஒரு பழக்கமாக உள்ளது. பாஜக அரசு என்பது தவறான செய்தி கூறி விட்டு, அதை அண்ணாமலை போன்றவர்கள் வழி நடத்துகிறார்கள்.
டங்ஸ்டன் போன்ற விவகாரத்திலும், மத்திய அரசு இதே போன்று தான் செயல்படுகிறது. டங்ஸ்டன் டெண்டரை கேன்சல் செய்ய கோரிக்கையை நாங்கள் வலியுறுத்துகிறோம். ஆனாலும் அதை செயல்படுத்தாமல் அண்ணாமலை மேலூரில் வந்து கதை பேசி செல்கிறார்.
மதுரை அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி செல்லும் திட்டம் என்பது 2011 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் காலத்தில் துவங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு மிகப்பெரிய அளவிலே தமிழக அரசின் பணி மிக முக்கியமானது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நீண்ட நாட்களாக செயல்பட்டது. இந்த பணி முக்கியமாக பார்க்கப்பட்டது. 400 அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது. 254 கோடி வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ரயில்வே நிர்வாகத்திடம் கடிதம் எழுதியுள்ளார். அதை வழங்க மத்திய அரசு முன் வரவில்லை. ஆனால் திட்டத்தை செயல்படுத்தாமல் 20% நிறைவேற்றிய பணியை கிடப்பில் போடப்பட்டுள்ளது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்.
பாரதப் பிரதமர் கிண்டல் செய்யாமல் இது உண்மையிலே ஒரு மத்திய அரசு செயல் படுத்தக்கூடிய திட்டம். இதை தெரியாமல் அண்ணாமலை அரசியல் செய்வதற்காக பயன்படுத்துகிறார். மத்திய அரசு இதில் உடனடியாக குறிப்பாக பிரதமர் உடனடியாக தலையிட்டு திட்டத்தை காக்க வேண்டியது அவருடைய கடமையாகும்.

சட்டமன்றத்தில் அதிமுக செயல்பாடுகள் நேரலையாக காட்டவற்றை என கூறியது குறித்த கேள்விக்கு,
அது எனது கருத்து தான் என கூறினார். என்னைப் பொறுத்தவரை எனது கருத்தை நான் கூறியுள்ளேன். இதில் விமர்சிப்பதற்கு ஒன்றும் இல்லை.
திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை செய்யவில்லை என நடிகர் விஜய் கூறியது பற்றிய கேள்விக்கு,
விஜய் பொருத்தவரை சூட்டிங் எல்லாம் முடித்துவிட்டு, அரசியலுக்கு வரட்டும். அவர் நேரடியாக அரசியலுக்கு வரும்போது தான் தெரியும். அவரை பொறுத்தவரை கட்சி மாவட்டத்திலிருந்து கூட சந்திக்க நேரமில்லை. தற்போது பணியில் சூட்டிங்யில் இருக்கிறார். அவருடைய அடுத்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடாத குறித்து கேள்விக்கு?
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வத்திறப்பு என்பதை அவர்களின் முடிவு அறிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த முடிவை நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம். திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரகுமார் வெற்றி பெற வேண்டும். அதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் பணி குழு அமைக்கப்பட்டுள்ளது. எங்களை பொறுத்தவரை தளத்திலே மிக முக்கியமாக வெற்றியை பெறுவதற்காக இந்தியா கூட்டணி பாடுபடும்.
சீமான் பெரியார் விமர்சனம் குறித்த கேள்விக்கு?
சீமான் அவர்களை பொறுத்தவரை புரியாமல் அரசியல் செய்கிறாரா அல்லது நிறைய படித்து விட்டு அரசியல் செய்கிறாரா என்பது புரியவில்லை. அவருக்கு பின்புறம் பாஜக ஆர். எஸ். எஸ் சித்தாந்தங்கள் இருப்பது போல் தெரிகிறது.
பெரியாரைப் பற்றி பேசுவது என்பதும், பெரியார் புகழுக்கு இழுக்கு விளைவிப்பது மூலம் தனக்கு விளம்பரம் கிடைக்கிறது என சீமான் நினைக்கிறார் என அச்சமும் இருக்கிறது..
அண்ணன் சீமான் கட்சியை கலைத்து விட்டு, பாஜகவுடன் இணைந்து செயல்படலாம் . பாஜக என்ன சொல்கிறதோ அதை செய்கிறார்.
தமிழகத்தில் பாஜக நுழைய முடியாததற்கு காரணம் பெரியார் விதைத்த சமூக நீதி அரசியல்.
அந்த சமூக நீதி அரசியலை உடைத்தெறியும் நோக்கத்தோடு தான் பாஜக ஆர் எஸ் எஸ் 30 ஆண்டுகளாக அரசியலை செய்து வருகிறது. நமது கண் முன்னாலே வருவது சுப்பிரமணிய சுவாமி போன்றவர்கள் என்னெல்லாம் பேசினார்கள் என்பது நமக்கு தெரியும். அவர்கள் இன்று அட்ரஸ் இல்லாமல் போய் உள்ளனர். அதே போலத்தான் தந்தை பெரியாரை இழிவு படுத்தி பேசுபவர்கள் சமூக நீதி புரியாதவர்கள் சமூகநீதி மூலம் தமிழகம் என்ன முன்னேற்றத்தை அடைந்துள்ளது. என்னவென்று அறியாதவர்கள் பேசிய பேச்சை அண்ணன் சீமான் பேசுகிறார்கள். இந்த பேச்சு பாஜக அரசு கொள்கை ஆர் எஸ்.எஸ் கொள்கைய வழியுறுத்துவதாக தெரிகிறது. இப்படிப் பேசுகின்ற பேச்சை அண்ணன் சீமான் தொடர்வார் என்றால், பாஜகவுடன் இணைவது தான் சரி என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறினார்.