மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்குண்டான முன்னேற்பாடுகள் பணிகளை 54 லட்சம் செலவில் மதுரை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. வாடிவாசல், சிறப்பு விருந்தினர்கள் மேடை, சாலை இருபுறமும் 1.8 கி.மீ தூரம் 8 அடி உயரத்துக்கு இரு அடுக்கு தடுப்பு வேலிகள் மற்றும் காளைகள் கொண்டு வரும் பொழுது இரும்பு வலை தடுப்பு வேலிகள், காளை பரிசோதனை இடம் என தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் 80 சதவீதம் முடித்து மீதி உள்ள பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
.இந்தப் பணிகளை ஆய்விட்ட அமைச்சர் மூர்த்தி அனைத்து பகுதிகளுக்கும் சென்று தடுப்பு வேலிகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்து, மேலும் சில இடங்களில் கூடுதல் தடுப்பு வேலிகள் அமைக்க உத்திரவிட்டு ஜல்லிகட்டு போட்டிகள் சிறப்பாக நடக்க ஆலோசனைகளை வழங்கினார்.
மதுரை ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மதுரை காவல் ஆணையாளர் லோகநாதன், 92 வது வார்டு கவுன்சிலர் கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அவனிபாபுரம் ஜல்லிகட்டு அமைச்சர் மூர்த்தி ஆய்வு
